/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரலாற்று புகழ்பெற்ற அரிக்கன்மேட்டில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ADDED : அக் 11, 2024 06:06 AM

அரியாங்குப்பம்: அரிக்கன்மேடு அருகே ஆக்கிரமிப்பு செய்வதை எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
அரியாங்குப்பம் அருகே வரலாற்று புகழ்பெற்ற அரிக்கன்மேடு பகுதி உள்ளது. இந்த இடத்தை தொல்லியல் துறையினர், இரண்டு முறை அகழ்வாராய்ச்சிகள் செய்துள்ளனர். அதில், இருந்து, பல அரிய வரலாற்று பொக்கிஷங்கள் கண்டெடுத்துள்ளனர். அரிக்கன்மேடு இடத்தில் இருந்து 300 மீட்டரில், அனுமதியின்றி மரங்கள் வெட்டுவது, மண் தரைகளை சமன் படுத்துவ போன்ற பணிகளை செய்ய கூடாது.
மீறி சட்டவிரோதமாக ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட இடையூறு பணிகளை மேற்கொண்டால் வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படும் என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், அரிக்கன்மேடு இடத்தில் அருகே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தனி நபர் ஒருவர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் மண் தரையை சமன் செய்யும் பணி நடந்தது. அதையடுத்து, இதுகுறித்து, அப்பகுதியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலெக்டர் மற்றும் தொல்லியல் துறையினருக்கு புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து, தெற்கு பகுதி தாசில்தார் பிரத்தீவ் உட்பட அதிகாரிகள் நேற்று முன்தினம் அந்த இடத்தை பார்வையிட்டு, விசாரணை செய்தனர். மேலும், அரிக்கன்மேடு இடங்களை ஆக்கிரமிப்பு தொடர்பாக தொல்லியல் துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரிக்கன்மேடு பகுதியில் உள்ள இடத்தை ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் எதிர்பாக்கின்றனர்.