ADDED : நவ 25, 2024 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார் : மேற்குப்பகுதி எஸ்.பி., தலைமையில் வில்லியனுார்போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள்குறைகேட்பு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி போலீஸ் சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., உத்தரவின் பேரில், மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி தலைமை யில் வில்லியனுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனிநபர் பிரச்னைகள், பாதிக்கப்பட்ட மக்கள்,பொது பிரச்னைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசி யல் கட்சி பிரமுகர்கள் குறைகேட்பு கூட்டத்தில் கலந்துகொண்டு குறைகளையும் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.