/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொது மக்கள் குறை கேட்பு கூட்டம்
/
பொது மக்கள் குறை கேட்பு கூட்டம்
ADDED : அக் 06, 2024 04:28 AM

பாகூர்: கிருமாம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில், பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது.
பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித் வரவேற்றார். எஸ்.பி., பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
கிருமாம்பாக்கம், பனித்திட்டு, புதுக்குப்பம், சார்காசிமேடு, பிள்ளையார்குப்பம், நரம்பை உள்ளிட்ட பல கிராம மக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்னைகளை தெரிவித்தனர்.
அதில், பிள்ளையார்குப்பம் - சார்காசிமேடு சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து பாதிக்கிறது. சார்காசிமேடு தனியார் குடியிருப்பு வளாகத்தில், இரவு நேரங்களில் மது அருந்துவது,கஞ்சா அடிப்பது உள்ளிட்ட செயல்களில் சமூக விரோதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இருந்து மருத்துவக் கழிவு, ரெட்டிச்சாவடி ஓடையில் விடப்படுவதால், ஆறு மற்றும் கடலில் மீன் பிடிக்கும் போது உடல் உபாதை ஏற்படுகிறது.சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
புதுக்குப்பம் சுற்றுலா திட்ட பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது என, பொது மக்கள் புகார் தெரிவித்தனர். சப் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் நன்றி கூறினார்.