ADDED : அக் 13, 2024 07:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடந்தது.
புதுச்சேரி போலீஸ் நிலையங்களில் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என, சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா உத்தரவிட்டார். அதன்படி, ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் பொது மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது.
இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமை தாங்கினார். ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வியாபாரிகள், பொது மக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு தங்களின் பொதுவான பிரச்னைகளை தெரிவித்தனர். அவை உடனடியாக சரிசெய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.