ADDED : டிச 23, 2024 06:24 AM

பாகூர்: வருவாய் துறை மூலம் 'கிராமங்களை நோக்கி மக்கள் குறை தீர்வு முகாம்' கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
தெற்கு மாவட்ட துணை கலெக்டர் சோமசேகர் அப்பாரு கொட்டாரு தலைமை தாங்கினார். பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முகாமில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நலவழித்துறை, இந்தியன் வங்கி, சட்டப் பணியாளர்கள் ஆணையம், குடிமைப் பொருள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். பொதுமக்களிடமிருந்து 385 மனுக்கள் பெறப்பட்டது.
ஆதார் பதிவு திருத்தம் உள்ளிட்ட சேவைகள், வருவாய், கொம்யூன் பஞ்சாயத்து சான்றிதழ் விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டது.