தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டி.ஐ.ஜி., தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

டி.ஐ.ஜி., தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்

டி.ஐ.ஜி., தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம்


ADDED : நவ 24, 2024 04:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2024 04:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு முகாம் நடந்தது.

புதுச்சேரி போலீஸ் டி.ஜி.பி., அறிவுறுத்தல்பேரில், பல்வேறு போலீஸ் நிலையங்களில் நேற்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. ரெட்டியார்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், எஸ்.பி., வீரவல்லபன் பொதுமக்களிடம் புகார்களை பெற்றனர்.

தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., பக்தவச்சலம், முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் கிழக்கு எஸ்.பி., இஷாசிங், வில்லியனுார் போலீஸ் நிலையத்தில் வம்சீதரெட்டி தலைமையில் புகார்கள் பெறப்பட்டது.

இதேபோன்று மாகியில் எஸ்.பி., சரவணன், ஏனாமில் எஸ்.பி., ராஜசேகரன் தலைமையில் பொதுமக்கள் குறைகள் கேட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முகாமில் 174 புகார்கள் பொதுமக்களிடம் கேட்ட றிந்து, 95 புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் பெரும்பலான புகார்கள் உடனடியாக தீர்வு காணப்பட்டு நிவாரணம் உறுதி செய்தனர். நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக போலீஸ் நிலைய அதிகாரிகளுக்கு சீனியர் அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சி வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும், காலை 11:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை நடக்கும்.

சீனியர் அதிகாரிகள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திற்கு சென்று நேரடியாக புகார்களை கேட்டு தீர்வு காண்பர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us