/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
/
அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்
ADDED : டிச 22, 2024 07:03 AM

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் பொது மக்கள் குறை தீர்வு கூட்டம், நேற்று நடந்தது. எஸ்.பி., பக்தவச்சலம் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி தெற்கு பகுதியில் உள்ள, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர் ஆகிய காவல் நிலையங்களில் இருந்து, இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பங்கேற்ற பொதுமக்கள், பல்வேறு பிரச்னைகள் பற்றி, நாங்கள் காவல் நிலையத்தில், புகார் அளித்துள்ளோம்.
அதன் மீதான விசாரணை, கால தாமதம் ஏற்படுகிறது. வயது மற்றும் உடல் நிலை காரணங்களால், அடிக்கடி காவல் நிலையத்திற்கு வரமுடியாமல் உள்ளது.
அப்படியே வந்தால், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் வெளியில் சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
சட்டம் ஒழுங்கு, சிவில் உள்ளிட்ட பிரச்னைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எஸ்.பி.,யிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.