ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பொதுப்பார்வையாளர் ஆய்வு
ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பொதுப்பார்வையாளர் ஆய்வு
ADDED : ஏப் 04, 2026 06:24 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு அண்ணா கல்லுாரியில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு செய்தார்.
காரைக்காலில் தேர்தலை அமைதியாகவும், சுதந்திரமாகவும் நடத்த தேர்தல்துறை சார்பில், அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தேர்தல் பொதுப் பார்வையாளர் சரிதா பாலா ஓம் பிரஜாபதி நேற்று முன்தினம் மேலையூர் சோதனைச்சாவடியை பார்வையிட்டார்.
பின், அண்ணா அரசு கல்லுாரியில் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம்களை ஆய்வு செய்தார்.
