/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் பாகூரில் பொதுமக்கள் ஆர்வம்
/
சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் பாகூரில் பொதுமக்கள் ஆர்வம்
சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் பாகூரில் பொதுமக்கள் ஆர்வம்
சோலார் திட்ட விழிப்புணர்வு முகாம் பாகூரில் பொதுமக்கள் ஆர்வம்
ADDED : ஆக 23, 2025 11:47 PM

பாகூர் : பாகூரில் வீடுகளுக்கு சோலார் பேனல் மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
புதுச்சேரி மின்துறை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையுடன் இணைந்து, பிரதம மந்திரி சூரிய ஒளி மின் திட்டத்தின் கீழ், வீடுகளுக்கு சோலார் பேனல் மின்சார திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், பாகூர் கமலா நேரு திருமண நிலையத்தில் நடந்தது.
முகாமில், மின்துறை செயற்பொறியாளர்கள் (சோலார் பிரிவு) செந்தில்குமார், செயற்பொறியாளர் (தெற்கு) கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர்கள் சக்திவேல், சசிக்குமார், பாகூர் இளநிலை பொறியாளர் அகிலன் ஆகியோர், பிரதம மந்திரி சூரிய ஒளி மின் திட்டம் மூலம் வீடுகளுக்கு சோலார் பேனல் மின்சார திட்டம் குறித்து விளக்கினர்.
மேலும், இம்முகாமில், 10க்கும் மேற்பட்ட சோலார் பேனல் தயாரிப்பு நிறுவனங்கள் அரங்கங்கள் அமைத்து, பொதுமக்களுக்கு இத்திட்டம் குறித்து விளக்கமளித்தன.
குறிப்பாக, இந்த திட்டத்தின் மூலம் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.30 ஆயிரம், 2 கிலோ வாட்டிற்கு ரூ.60 ஆயிரம், 3 கிலோ வாட் அதற்கு மேல் ரூ.78 ஆயிரம் மானியமாக மத்திய அரசு வழங்குகிறது. மேலும், முகாமில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள்,சோலார் பேனல் அமைப்பதற்கு 6 சதவீதம் வட்டியில்,எளிமையான முறையில் கடன் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுப்பது குறித்து விளக்கினர்.
சோலார் பேனல் மூலம் 3 கிலோ வாட் மின் உற்பத்தி நிலையம் அமைத்தால், ஆண்டிற்கு 4,500 யூனிட் மின் உற்பத்தி கிடைக்கும். வீட்டின் தேவைக்கு போக மீதம் உள்ள மின்சாரத்தை மின்துறை பெற்றுக்கொண்டு ஒரு யூனிட்டுக்கு ரூ 5.77 பைசா வீட்டின் உரிமையாளருக்கு வழங்கும். இதன் மூலமாக, முதல் ஐந்து ஆண்டிற்குள் முதலீட்டை திரும்ப பெறுவது எப்படி என, நுகர்வோருக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
முகாமில், பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.