/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் பொதுமக்கள் ஆர்வம்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் பொதுமக்கள் ஆர்வம்
ADDED : நவ 24, 2025 08:06 AM

புதுச்சேரி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்று பூர்த்தி செய்த படிவங்களை, அலுவலர்களிடம் அளித்தனர்.
வாக்காளார் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி, புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடந்து வருகிறது.
கடந்த 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர்களுக்கு, விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை, நேரடியாக வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், விடுமுறை நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடந்தது.
நேற்று முத்தியால்பேட்டை தனியார் பள்ளியில் நடந்த சிறப்பு முகாமில் 100க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பூர்த்தி செய்த படிவங்களை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர்.

