ADDED : ஜன 29, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : காலி மனைகளில் வளர்ந்துள்ள செடி, முட்புதர்களை அகற்ற வேண்டும் என அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையரிடம் நகர மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆணையர் ரமேஷிடம் கொடுத்துள்ள மனுவில், அரியாங்குப்பம் ஒத்த தெரு பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில், சில இடங்களில் காலியான மனைகளில் செடி, கொடிகளுடன் புதர்கள் மண்டி கிடக்கிறது. அந்த இடங்களில் கொடிய விஷம் உள்ள பாம்புகள் நடமாட்டம் இருந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு வீடுகளில் பாம்புகள் புகுந்துள்ளன.
தெருவில், குழந்தைகளை விளையாட விடுவதற்கு பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மண்டியுள்ள செடி,கொடி புதர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில், மக்கள் கோரியுள்ளனர்.