/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னரிடம் பட்டா வழங்க பொதுமக்கள் கோரிக்கை
/
கவர்னரிடம் பட்டா வழங்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 15, 2025 04:37 AM
அரியாங்குப்பம்: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த கவர்னரிடம் மனை பட்டா வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை விடுத்தனர்.
அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி, தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கம் அம்பேத்கர் சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, சபாநாயகர் செல்வம், கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் முத்தம்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, டி.என்., பாளையம் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கவர்னர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கவர்னர் வருவதை அறிந்த அங்கு கூடியிருந்த பொதுமக்கள், இலவச மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும். சாலையில், மின் விளக்கு அமைக்க வேண்டும். இரவு நேரங்களில், சாலையிலேயே மது குடிப்பவர்களால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை கவர்னரிடம் தெரிவித்தனர். நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.