தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கடலுார் சாலை மோசம்: பொதுமக்கள் கடும் அவதி

கடலுார் சாலை மோசம்: பொதுமக்கள் கடும் அவதி

கடலுார் சாலை மோசம்: பொதுமக்கள் கடும் அவதி


UPDATED : செப் 21, 2026 07:33 PM

ADDED : செப் 21, 2026 07:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2026 07:33 PM ADDED : செப் 21, 2026 07:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: கடலுார் சாலையில் மெகா பள்ளங்கள் இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து செல்கின்றனர்.

புதுச்சேரி - கடலுார் சாலை வழியாக சென்னை மார்க்கத்திலும், கடலுார் மார்க்கத்தில், சிதம்பரம், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி ஆகிய முக்கிய ஊர்களுக்கு புதுச்சேரியை கடந்து, தினந்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன.

அரியாங்குப்பத்தில் இருந்து முள்ளோடை வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. நோணாங்குப்பம், தவளக்குப்பம் ஆகிய இடங்களில் மெகா பள்ளங்கள் உள்ளதால், மழை பெய்யும் போது, மழைநீர் பள்ளத்தில் நிற்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து காயமடைந்து வருகின்றனர்.

கடலுார் பகுதியில் இருந்து புதுச்சேரி மற்றும் சென்னை பகுதி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் வரும் நோயாளிகள் கடுமையாக அவதியடைந்து வருகின்றனர். முக்கிய சாலையாக இருப்பதால், மழை துவங்குவதற்கு முன்பு பொதுப்பணித்துறையினர் பேட்ச் ஒர்க் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us