/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணி துறை கூட்டுறவு சங்க பொது பேரவை கூட்டம்
/
பொதுப்பணி துறை கூட்டுறவு சங்க பொது பேரவை கூட்டம்
ADDED : அக் 27, 2024 04:55 AM

புதுச்சேரி : புதுச்சேரி பொதுப்பணித் துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொதுப் பேரவை கூட்டம் நேற்று நடந்தது.
கம்பன் கலையரங்கில் நடந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் இளங்கோ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தணிக்கை அறிக்கை வாசித்து ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மேலும் 2023-24ம் நிதியாண்டிற்கு லாப பிரிவினை செய்து, நாளை 28ம் தேதி முதல் பங்கு தொகை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
2025-26ம் நிதியாண்டிற்கான உத்தேச வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு, மழை கோட், ெஹல்மெட் ஆகியவை பதிவாளர் அனுமதியுடன் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மனைப்பட்டா, அடக்கவிலை அங்காடி அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சங்க துணை தலைவர் அண்ணாமலை, பொருளாளர் முருகன், இயக்குனர்கள் சரவணன், வெங்கடேஸ்வரன், குணசேகர பாண்டியன், கருணாகரன், வீரபுத்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை செயலாளர் கிருஷ்ணன், மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.