ADDED : பிப் 03, 2026 04:39 AM
புதுச்சேரி: புதுச்சேரி தொழிலாளர் நலன் சங்கம் சார்பில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யகோரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.
போராட்டத்துக்கு சங்க தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பெலவேந்திரன், அங்கப்பன், பரந்தாமன், பாலு, ராம்குமார், மாரிமுத்து, ஜனார்த்தனன் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் ஆறுமுகம், ஜெயபிரகாஷ், ராஜா, பிரபுராஜ், ஆறுமுகம், விஜயகுமார், கோபிநாத், ராஜவேல், ஒபேத், சேரன், சீனுவாசன், ராஜீவ்காந்தி, முருகானந்தம், லட்சுமணன், கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி அரசு துறைகளில் 10 ஆண்டு பணி முடித்தவர்களை நிரந்தரம் செய்வதாக அறிவித்த முதல்வர் அறிவிப்பை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கை மீதான கோப்புகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். பணிநிரந்தரம் செய்யாத ஊழியர்களுக்கு சிறப்பு திட்டம் உருவாக்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
