/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம்
/
பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம்
பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம்
பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம்
ADDED : ஜன 08, 2024 04:58 AM

புதுச்சேரி: புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்கள் கூட்டுறவு சங்கத்தின் பொது பேரவைக் கூட்டம், கம்பன் கலையரங்கில் நடந்தது.
சங்கத் தலைவர் இளங்கோ தலைமை தாங்கி நடத்தினார். இதில், கடந்த 2022-23ம் நிதியாண்டிற்கான தணிக்கை அறிக்கை வாசித்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த நிதியாண்டிற்கான, லாபம் பிரிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு, அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், 2024-25ம் ஆண்டிற்கான, உத்தேச வரவு - செலவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், துணைத் தலைவர் அண்ணாமலை, பொருளாளர் முருகன், இயக்குநர்கள் சரவணன், சேகர், வெங்கடேஸ்வரன், குணசேகர பாண்டியன், கருணாகரன், வீரபுத்திரன் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சங்க செயலாளர் கிருஷ்ணன், மேலாளர் ராஜேந்திரன் செய்திருந்தனர்.