தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுப்பணித்துறை செயலர் ஆய்வு

 புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுப்பணித்துறை செயலர் ஆய்வு

 புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொதுப்பணித்துறை செயலர் ஆய்வு


ADDED : நவ 29, 2025 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்திரா சதுக்கம் அருகே மழைநீர் தேங்குவதை தடுக்க பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'டிட்வா' புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழக பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட் டுள்ளது.

இதையொட்டி, புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, இந்திரா சதுக்கம் அருகே கனமழை காரணமாக தண்ணீர் தேங்குவதை தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுப்பணித்துறை செயலர் முத்தம்மா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்திரா சதுக்கம் அருகே அண்ணா நகரின் தாழ்வான பகுதிகளை பார்வையிட்ட அவர், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்குள்ள கட்டட இடிபாடுகளை சரி செய்து, மழைநீர் வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

மேலும், அங்கிருந்த சேதமடைந்த மின்சார பெட்டிகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்களை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது தலைமை பொறியாளர் வீரசெல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us