/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வேளாண் தொழில்நுட்ப கையேடு வெளியீடு
/
வேளாண் தொழில்நுட்ப கையேடு வெளியீடு
ADDED : ஏப் 22, 2025 04:33 AM
புதுச்சேரி: வேளாண் பட்டதாரி அதிகாரிகள் நலச்சங்கத்தின் வேளாண் தொழில்நுட்ப கையேட்டினை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.
புதுச்சேரி அரசு வேளாண் துறையில் பணியாற்றும் வேளாண் பட்டதாரி அதிகாரிகள் நலச்சங்கம் சார்பில் தயாரிக்கப்பட்ட 2025-26ம் ஆண்டிற்கான வேளாண் தொழில்நுட்ப கையேடு வெளியீட்டு விழா சட்டபையில் நேற்று நடந்தது.
விழாவில், முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, வேளாண் தொழில் நுட்ப கையேட்டினை வெளியீட்டார். சபாநாயகர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார், அரசு கொறடா ஆறுமுகம், நேரு எம்.எல்.ஏ., வேளாண் இயக்குநர் வசந்தகுமார், வேளாண் அமைச்சரின் தனிச் செயலர் மனோகரன், கூடுதல் வேளாண் இயக்குநர்கள் ஜெயசங்கர், ஜாகீர் உசேன், இணை வேளாண் இயக்குநர் சண்முகவேலு, செழியன்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கையேட்டில், தொழில்நுட்ப வல்லுனர்களின் பெயர்கள், பதவி, இயக்குனரக அலுவலகங்கள் மற்றும் துணை அலுவலகங்களின் முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய விவரங்கள், மத்திய, மாநில அரசு திட்டங்கள், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு மற்றும் களை நிர்வாகம், மூலிகை தாவரங்கள், வீட்டு காய்கறித் தோட்டம், விவசாயத்தில் ட்ரோன்களின் பயன்பாடு, மாநிலத்தின் மண் வகைகள் மற்றும் மண்வள அட்டை வழங்கும் திட்டம், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பங்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.