வாக்கு என்னும் மையங்களில் தொகுதிகள் விவரங்கள் வெளியீடு
வாக்கு என்னும் மையங்களில் தொகுதிகள் விவரங்கள் வெளியீடு
ADDED : ஏப் 23, 2026 11:34 PM
புதுச்சேரி:புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9ம் தேதி நடந்தது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரியில் 3 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு, அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை வரும் 4-ந் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் மையங்கள் மற்றும் தொகுதிகளில் விவரம் வருமாறு:
பெண்கள் பொறியியல் கல்லுாரியில் , கதிர்காமம், இந்திராநகர், தட்டாஞ்சாவடி, காமராஜ் நகர், நெல்லித்தோப்பு, முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், மணவெளி, ஏம்பலம், பாகூர் ஆகிய தொகுதிகளும், லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் மண்ணாடிப்பட்டு, திருபுவனை, ஊசுடு, மங்கலம், வில்லியனுார், உழவர்கரை , நெட்டப்பாக்கம் தொகுதிகளுக்கும் ,தாகூர் கலைக்கல்லுாரியில் லாஸ்பேட்டை, காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உப்பளம். உருளையன்பேட்டை தொகுதிகளுக்கு ஓட்டுகள் எண்ணப்படும்.
