ADDED : நவ 27, 2024 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தோட்டக்கலை மானிய தொகை வழங்கும் திட்ட பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் (தோட்டக்லை) சண்முகவேலு விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வேளாண் நலத்துறை சார்பில் இந்த ஆண்டிற்கான தோட்டக்கலை பயிர் சாகுடி செய்த விவசாயிகளுக்கு சாகுபடிக்கு பிந்தைய மானிய தொகை வழங்குவதற்கான பயனாளிகள் பெயர் பட்டியல் சமுதாய தணிக்கைக்காக அனைத்து உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், வேளாண் துறை (https://agri.py.gov.in) என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் வரும் டிச.5ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலம்.

