/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
/
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கு இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
ADDED : ஜூலை 12, 2025 03:28 AM
புதுச்சேரி: முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான இறுதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்டாக் முதுநிலை பல் மருத்துவ படிப்பான எம்.டி.எஸ்., இடங்களுக்கு கடந்த 3ம் தேதி முதல் 6ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. நீட் தேர்வு எழுதிய இளநிலை மருத்துவ மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மொத்தம் 52 மாணவர்கள், நிர்வாக இடங்களுக்கு 31 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
விண்ணப்ப பரிசீலனை முடிந்து முதுநிலை பல் மருத்துவ படிப்பிற்கான இறுதி தரவரிசை பட்டியலை நேற்று சென்டாக் www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
எஸ்.சி., - எஸ்.டி., பி.டி., ஓ.பி.சி., எம்.பி.சி., முஸ்லீம், இடபுள்யூ.எஸ்., என இட ஒதுக்கீடு வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதேபோல் விளையாட்டு வீரர், மாற்றுத்திறனாளி, விடுதலை போராட்ட வீரர், முன்னாள் ராணுவ வீரர் என சிறப்பு இடஒதுக்கீடு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
முதுநிலை படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கப்பட உள்ளதால், இன்று 12ம் தேதி மதியம் 2:00 மணிக்குள் கோர்ஸ் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என, சென்டாக் அறிவித்துள்ளது.

