/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
"கிளிக் எ பிக்' புகைப்பட போட்டி: பீச் டவுண் ரோட்டரி சங்கம் ஏற்பாடு
/
"கிளிக் எ பிக்' புகைப்பட போட்டி: பீச் டவுண் ரோட்டரி சங்கம் ஏற்பாடு
"கிளிக் எ பிக்' புகைப்பட போட்டி: பீச் டவுண் ரோட்டரி சங்கம் ஏற்பாடு
"கிளிக் எ பிக்' புகைப்பட போட்டி: பீச் டவுண் ரோட்டரி சங்கம் ஏற்பாடு
ADDED : செப் 17, 2011 01:22 AM
புதுச்சேரி : 'கிளிக் எ பிக்' என்ற தலைப்பில் புகைப்பட போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து புகைப்பட போட்டி அமைப்புக் குழுவின் தலைவர் அனில்குமார் போர்வால் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி பீச் டவுண் ரோட்டரி சங்கமும், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகமும் இணைந்து 'கிளிக் எ பிக்' என்ற புகைப்பட போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளது.'புதுச்சேரியில் பிரெஞ்சு தொடர்பானவை', 'புதுச்சேரியின் சுற்றுலா தளங்கள்', 'புதுச்சேரியின் பழமைவாய்ந்த கட்டடக் கலை' ஆகிய மூன்று தலைப்புகளில் புகைப்படங்கள் எடுக்கலாம்.
புகைப்படத்தை விண்ணப்பத்தோடு இணைத்து, விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 30ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். ஒருவர் எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம். போட்டியில் அனைத்துப் பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.போட்டியில் பங்குபெறும் அனைத்து புகைப்படங்களும், வரும் அக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில், லிசே பிரான்சேஸ் பிரெஞ்சு பள்ளியில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியாக வைக்கப்படும். சர்வதேச அளவில் மிகச் சிறந்த புகைப்பட வல்லுனர்களைக் கொண்ட குழுவினர், சிறந்த புகைப்படங்களைத் தேர்வு செய்வர்.ஒவ்வொரு பிரிவிலும் முதல் பரிசாக தலா 3000 ரூபாய், இரண்டாவது பரிசாக 2500 ரூபாய், மூன்றாவது பரிசாக 1000 ரூபாய் வழங்கப்படும். அக்டோபர் 2ம் தேதி மாலை நடக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து புகைப்படங்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.புகைப்படங்கள் 12 ஙீ 8 செ.மீ., அளவில் இருக்க வேண்டும். பிரபலமான கடைகளிலும், வியாபார ஸ்தாபனங்களிலும் விண்ணப்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை 100 ரூபாய் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 99940 50000, 94432 39458, 98947 68081 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.பீச் டவுண் ரோட்டரி சங்கத்தின் தலைவர் புரோபிர் பானர்ஜி, செயலாளர் அஜய் விர்மானி உடனிருந்தனர்.