/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்
/
பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்
பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்
பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டு போராட்டம்
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : பாரதியார் பல்கலைக்கூடத்தில் உள் கட்டமைப்பு வசதிகள் சரியில்லை என கூறி, முதல்வர் அறையை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.அரியாங்குப்பத்தில் பாரதியார் பல்கலைக்கூடம் இயங்கி வருகிறது.
இங்கு முறையான வகுப்பறைகள், சுகாதாரமான கழிப்பிட வசதிகள் இல்லை எனவும், வகுப்பறைகளை சுற்றி முட்புதர்கள் மண்டியுள்ளதால், பூச்சிகளின் தொல்லை அதிகமாக உள்ளதாகவும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக் கோரி புதுச்சேரி ஏ.பி.வி.பி., மாணவர் அமைப்பு பொறுப்பாளர் சிவா தலைமையில் மாணவர்கள் நேற்றுமுன்தினம் பல்கலைக்கூட முதல்வர் அறையை முற்றுகையிட்டனர்.அங்கு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோஷம் எழுப்பினர். அவர்களுடன் பல்கலைக்கூட உறுப்பினர் செயலர் குப்புசாமி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த மாணவர்கள் பின்னர் கலைந்து சென்றனர்.