/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.எல்.ஏ., நினைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலம் வந்தனர்
/
எம்.எல்.ஏ., நினைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலம் வந்தனர்
எம்.எல்.ஏ., நினைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலம் வந்தனர்
எம்.எல்.ஏ., நினைப்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் வலம் வந்தனர்
ADDED : செப் 27, 2011 11:50 PM
புதுச்சேரி : 'உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும் எம்.எல்.ஏ., என்ற நினைப்பில் வலம் வந்தனர்' என அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் புதுச்சேரி கிளை சார்பில், '1959 முதல் புதுச்சேரியின் கிராம வளர்ச்சிக்கு பஞ்சாயத்துகளின் பங்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கம், தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது.பொது நிர்வாக நிறுவன துணைத் தலைவர் அசோகன் வரவேற்றார்.
தலைவர் தனபால் தலைமை தாங்கினார். கருத்தரங்கை உள்ளாட்சித் துறை செயலர் ஸ்ரீகாந்த், துவக்கி வைத்தார். இயக்குனர் பாலசுப்ரமணியன் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் பங்கேற்ற மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, உள்ளாட்சித் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:புதுச்சேரியில் பல ஆண்டுகளுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அவற்றின் பதவிக் காலம் முடிந்த உடன், தேர்தல் நடத்தும் வகையில் மாநிலத் தேர்தல் ஆணையர் நியமிக்கப்படவில்லை. தேர்தல் நடத்தாததால், உள்ளாட்சிகளில் செலவு கூட செய்யமுடியவில்லை. செய்த வேலைகளுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. உள்ளாட்சி நிர்வாகம் ஸ்தம்பித்துப் போய் உள்ளது. புதிதாக வந்த எங்கள் அரசு, உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரி நியமிப்பதற்கான கோப்பினை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. அந்த கோப்பு எப்போது திரும்பி வரும் எனத் தெரியவில்லை.ஆறு மாதங்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த காலத்தில் உள்ளாட்சிகளுக்கு 29 அதிகாரங்களைக் கொடுத்தோம். ஆனால், அவை பெயரளவில்தான் இருந்தன.உள்ளாட்சி பிரதிநிதிகள் அனைவரும், எம்.எல்.ஏ., என்ற நினைப்பில்தான் வலம் வந்தனர். எம்.எல்.ஏ., என்ன சம்பளம் வாங்குகிறாரோ அதுபோல தாங்களும் வாங்க வேண்டும் என்ற பேராசை, அரசு அதிகாரிகளுடன் ஒத்துப் போகாத நிலை என ஆரோக்கியமற்ற சூழ்நிலைதான் இருந்தது.இவ்வாறு அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.