sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆட்சி மாற்றம் ஏற்படும் செம்மலை எம்.பி., ஆருடம்

/

ஆட்சி மாற்றம் ஏற்படும் செம்மலை எம்.பி., ஆருடம்

ஆட்சி மாற்றம் ஏற்படும் செம்மலை எம்.பி., ஆருடம்

ஆட்சி மாற்றம் ஏற்படும் செம்மலை எம்.பி., ஆருடம்


ADDED : அக் 04, 2011 01:55 AM

Google News

ADDED : அக் 04, 2011 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : 'ரங்கசாமி ஆட்சியைக் கவிழ்க்க காங்., திட்டம் தீட்டி வருகிறது' என, செம்மலை எம்.பி., பேசினார்.

இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பாஸ்கரனை ஆதரித்து அவர் பேசியதாவது:கடந்த தேர்தலுக்குப் பிறகு, ஜெயலலிதா ஆதரவோடு ரங்கசாமி ஆட்சி புரிய வாய்ப்பு கிடைத்தது. அதை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை. மக்களுக்கு அவர் நன்றியுள்ளவராக இருந்தாரா. இல்லை...நன்றி சொல்ல அவருக்கு நேரம் கிடைக்கவில்லை.அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 5 பேரில் 2 பேருக்கு அமைச்சர் பதவி அளித்து ஆட்சி அமைத்திருந்தால் 5 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி நடத்தியிருக்க முடியும். ஆதரவு அளித்த அ.தி.மு.க.,வினருக்கு அமைச்சர் பதவி அளிக்க அவருக்கு மனமில்லை. சட்டசபையைக் கூட்டுவதிலும் தாமதம். அமைச்சர் பெயர்களை அறிவிப்பதிலும் தாமதம் தான். அவர் ஆட்சி அமைத்த பிறகு புதுச்சேரியில் எந்த வளர்ச்சியும் இல்லை. தமிழகத்தில் ஆட்சி அமைத்த 100 நாட்களுக்குள் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இங்கு ஆட்சி தத்தளித்துக் கொண்டுள்ளது. நிர்வாகம் நடத்த முடியாமல் ரங்கசாமி உள்ளார். புதுச்சேரியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.தவறான ஆட்சி நடக்கிறது. மக்களின் ஆத்திரத்திற்கு ரங்கசாமி ஆளாகியுள்ளார். தோற்று விடுவோம் என்ற பயம் வந்து விட்டதால், வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கிறார். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளிக்கிறார். முதல்வர் மற்றும் அமைச்சராக 20 ஆண்டுகள் பதவியில் இருந்தபோது ஏன் நிறைவேற்றவில்லை. இவ்வளவு நாள் மக்களை ஏமாற்றி விட்டு, இன்று குறை கேட்பதா. இனிமேல் நீங்கள் நிறைவேற்ற வேண்டாம். அ.தி.மு.க., பாஸ்கரன் நிறைவேற்றுவார். ரங்கசாமியை எப்போது கவிழ்க்க முடியும் என காங்., திட்டம் தீட்டி வருகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.இவ்வாறு செம்மலை பேசினார்






      Dinamalar
      Follow us