/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வரை முற்றுகையிட்ட பெண்கள் தர்மாபுரியில் திடீர் பரபரப்பு
/
முதல்வரை முற்றுகையிட்ட பெண்கள் தர்மாபுரியில் திடீர் பரபரப்பு
முதல்வரை முற்றுகையிட்ட பெண்கள் தர்மாபுரியில் திடீர் பரபரப்பு
முதல்வரை முற்றுகையிட்ட பெண்கள் தர்மாபுரியில் திடீர் பரபரப்பு
ADDED : அக் 05, 2011 01:22 AM
புதுச்சேரி : இந்திரா நகரில் பிரசாரம் செய்த முதல்வரை, பெண்கள் முற்றுகையிட்டு சரமாரியாக குறை கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்திரா நகர் தொகுதி என்.ஆர்.
காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி தர்மாபுரி பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். முன்னதாக, அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வழிபட்டு பிரசாரத்தை துவக்கினார். அய்யங்குட்டிப்பாளையத்தில் ஓட்டு சேகரித்தபோது, அப் பகுதியை சேர்ந்த பெண்கள் முதல்வரை முற்றுகையிட்டனர். தெருவோர குடிசைகளில் வசிப்பவர்கள் மற்றும் தீ விபத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டித் தரப்படும் என கூறினர், வாரியத்தின் சார்பில் பலருக்கு வீடு ஒதுக்கீடு முன்னுரிமை அடையாள அட்டையும் கொடுத்தனர். ஆனால் இதுவரை யாருக்கும் வீடு கட்டித் தரவில்லை என்று பெண்கள் சரமாரியாக புகார் கூறினர். பெண்கள் வைத்திருந்த அடையாள அட்டையை வாங்கிப் பார்த்த முதல்வர், 'என்னுடைய ஆட்சியின்போது இந்த அட்டை வழங்கப்படவில்லை' என கூறி பெண்களை சமாதானப்படுத்தினார். இடைத்தேர்தல் முடிந்தவுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடு கட்டித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.அமைச்சர்கள் கல்யாணசுந்தரம், ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, அசோக் ஆனந்து, கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ., நடராஜன், நிர்வாகிகள் ஜெயபால், மாரிமுத்து, கன்ஷிராம் பகுஜன் சமாஜ் நிறுவனர் தங்க கலைமாறன், வீரவன்னியர் பேரவை அழகானந்தம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

