sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

என்.ஆர்.காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

/

என்.ஆர்.காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

என்.ஆர்.காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்

என்.ஆர்.காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்


ADDED : அக் 05, 2011 01:22 AM

Google News

ADDED : அக் 05, 2011 01:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : பிரச்னைகளை மறந்துவிட்டு ஒற்றுமையாக இருந்து என்.ஆர்.காங்., வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.என்.ஆர்.

காங்., வேட்பாளர் தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி நேற்று காலை தர்மாபுரி பகுதியில் பிரசாரத்தைத் துவக்கினார். முன்னதாக தர்மாபுரியிலுள்ள ராம் திருமண மண்டபத்தில் நடந்த என்.ஆர்.காங்., கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில்,

இடைத்தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்கும் கட்சி வேட்பாளர்கள் டிபாசிட் வாங்கக்கூடாது. மக்களுக்காக இந்த ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் சேவை செய்து வரும் எனக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் வகையில் இந்த இடைத்தேர்தலில் பெருவாரியான ஓட்டுகள் அளித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும்.நான் எப்போதும் உங்களுடைய முதல்வர் தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தத் தொகுதியும் என்னுடைய தொகுதிதான். தொகுதியில் சின்ன, சின்ன பிரச்னைகள் இருக்கலாம். பிரச்னைகளைத் தனிப்பட்ட முறையிலும், அரசு மூலமும் விரைவில் தீர்த்து வைப்பேன்.இது நம்முடைய ஆட்சி, உங்கள் ஆட்சி, மக்களுடைய ஆட்சி. இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். இந்த ஆட்சி ஏழை, எளிய மக்களுக்காகவும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் நடக்கிறது. உங்களுக்குள் இருக்கும் பிரச்னைகளை மறந்துவிட்டு அனைவரும் ஒற்றுமையாக இருந்து என்.ஆர்.காங்., கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய பாடுபடவேண்டும் என்றார்.








      Dinamalar
      Follow us