/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
/
பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
ADDED : ஜூலை 31, 2011 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் பள்ளி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.கோர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி, வகுப்பு புறக்கணிப்பு செய்து பள்ளி எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்ததனர்.மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 10ம் வகுப்பு மாணவர்கள் சிலரை, ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கரிக்கலாம்பாக்கம் பள்ளி எதிரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.