நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருமாம்பாக்கம் : புதுக்குப்பம் படவேட்டம்மன் கோவில் செடல் திருவிழா நடந்தது.கன்னியக்கோவில் அடுத்த மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் படவேட்டம்மன் கோவிலின் 35ம் ஆண்டு செடல் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.முக்கிய விழாவான செடல் பெருவிழா நேற்று முன்தினம் மாலை நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அலகு குத்தியும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது.பிரார்த்தனை உற்சவம், அம்மன் சாந்தி, ஊஞ்சல் உற்சவம் இன்று நடக்கிறது.