sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 04, 2026 ,தை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புதுச்சேரி செஸ் போட்டி: ஆந்திராவுக்கு முதல் பரிசு

/

புதுச்சேரி செஸ் போட்டி: ஆந்திராவுக்கு முதல் பரிசு

புதுச்சேரி செஸ் போட்டி: ஆந்திராவுக்கு முதல் பரிசு

புதுச்சேரி செஸ் போட்டி: ஆந்திராவுக்கு முதல் பரிசு


ADDED : ஆக 17, 2011 04:05 AM

Google News

ADDED : ஆக 17, 2011 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : சர்வதேச தரப் பட்டியலில் உள்ள வீரர்களுக்கு புதுச்சேரியில் நடந்த அகில இந்திய அளவிலான செஸ் போட்டியில், ஆந்திராவைச் சேர்ந்த ரவிதேஜா முதல் பரிசு வென்றார்.

புதுச்சேரி மாநில சதுரங்க கழகத்தின் அனுமதியுடன், லாஸ்பேட்டை கிங் ஆனந்த் செஸ் கிளப் சார்பில் சர்வதேச தரப்பட்டியலில் உள்ள சதுரங்க வீரர்கள் பங்கேற்ற அகில இந்திய அளவிலான செஸ் போட்டி, கடந்த 13ம் தேதி முத்தியால்பேட்டை ஆறுமுகா திருமண நிலையத்தில் துவங்கியது. நான்கு நாட்களாக நடந்த போட்டியில், பல்வேறு மாநிலங்களிலிருந்து 430 செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் ஒன்பது சுற்றுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.

ஆந்திராவைச் சேர்ந்த ரவிதேஜா, 8.5 புள்ளிகள் பெற்று முதல் பரிசை வென்றார். புதுச்சேரியைச் சேர்ந்த லின்டா ரங்கராஜன் 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பெற்றார். மேலும், பல்வேறு பிரிவுகளில் 30 பேர் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதன் பரிசளிப்பு விழா நேற்று மாலை நடந்தது. ரொக்கப் பரிசாக ரூ.1.21 லட்சம் வழங்கப்பட்டது. சிறுவர், சிறுமியர்களுக்கு தனியாக 60 பரிசுகள் வழங்கப்பட்டன.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற முதல்வரின் பார்லிமென்ட் செயலர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில சதுரங்கத் தலைவர் பக்தவச்சலம், செயலாளர் தேவக்குமார், பூபதி, சரவணன், கிங் ஆனந்த் செஸ் கிளப் தலைவர் ஆரோக்கியராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us