sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

/

அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்

அரசின் சலுகைகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் மாணவர்களுக்கு முதல்வர் அட்வைஸ்


ADDED : ஆக 17, 2011 04:05 AM

Google News

ADDED : ஆக 17, 2011 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருமாம்பாக்கம் : மாணவர்கள் கல்வி கற்பதற்கு புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி பேசினார்.

எவர்கிரீன் இளைஞர் மன்றம் சார்பில் சுதந்திர தின விழா மற்றும் எவர்கிரீன் நிறுவன துவக்க விழா பிள்ளையார்குப்பம் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது. நிறுவன தலைவர் ரமேஷ் வரவேற்றார். பிள்ளையார்குப்பம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நடராசன் முன்னிலை வகித்தார். தியாகி பாண்டுரங்கன் தேசிய கொடியேற்றி, பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கினார். விழாவையொட்டி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நடந்த சுதந்திர தின விழா கலை நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி எவர்கிரீன் நிறுவத்தை துவக்கி வைத்து பேசியதாவது:

மாணவர்கள் கல்வி கற்பதற்கு புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுகிறது. அதனை பயன்படுத்தி கொண்டு நன்றாக படித்து ஒவ்வொரு கிராமத்திலும் இருந்து குறைந்தது இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உருவாகி, ஊருக்கும், நமது மாநிலத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

தற்போது அழிந்து வரும் இயற்கை வளங்களை காப்பது நமது கடமை. நிலத்தடி நீரையே நாம் குடிநீராக பயன்படுத்தி வருகின்றோம். தற்போது நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இன்னும் ஒரு சில ஆண்டுகள் வரை மட்டுமே நாம் நல்ல தண்ணீரை பெற முடியும். எனவே அதிகமாக பயன்படுத்தும் நிலத்தடி நீரை சேமித்து, மழை நீரை தேக்கி பயன்படுத்த வேண்டும்.

அழிந்து வரும் இயற்கை வளங்களை பாதுகாப்பது நமது கடமை. புதுச்சேரியில் காற்று மற்றும் நீரை மாசு படுத்தக்கூடிய இரும்பு, எஃகு, ரசாயண தொழிற்சாலைகளுக்கு அதிகமாக அனுமதி கொடுப்பது கிடையாது.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

விழாவில் கிருமாம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து சமூக ஆர்வலர் கலாவிசு தலைமையில் குடும்ப முன்னேற்றத்திற்கு காரணம் கணவரா-மனைவியா என்ற தலைப்பில் பட்டிமன்றம் மற்றும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

விழாவில் அமைச்சர் ராஜவேலு, தியாராஜன் எம்.எல்.ஏ,. பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர் மோகன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us