sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

நகரத்தில் துணை தாசில்தார் அலுவலகம்: லட்சுமிநாராயணன் கோரிக்கை

/

நகரத்தில் துணை தாசில்தார் அலுவலகம்: லட்சுமிநாராயணன் கோரிக்கை

நகரத்தில் துணை தாசில்தார் அலுவலகம்: லட்சுமிநாராயணன் கோரிக்கை

நகரத்தில் துணை தாசில்தார் அலுவலகம்: லட்சுமிநாராயணன் கோரிக்கை


ADDED : செப் 03, 2011 01:54 AM

Google News

ADDED : செப் 03, 2011 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : 'புதுச்சேரி நகரப் பகுதியில் துணை தாசில்தார் அலுவலகம் அமைக்க வேண்டும்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., கூறினார்.சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:லட்சுமிநாராயணன்: நகரப் பகுதியில் இருந்த தாசில்தார் அலுவலகம், 100 அடி சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால், ஏழை மக்கள் அங்கு சென்றுவர அதிக செலவு ஆவதை அரசு அறியுமா...முதல்வர் ரங்கசாமி: பிரதான சாலையில் அமைந்துள்ளதால் ஏழை மக்கள் அங்கு சென்று வரை போதுமான போக்குவரத்து வசதி உள்ளது.லட்சுமிநாராயணன்: நகரப் பகுதியில் துணை தாசில்தார் அலுவலகம் அமைக்க அரசு முன் வருமா...முதல்வர் ரங்கசாமி: துணை தாசில்தார் அலுவலகம் அமைக்கும் திட்டம் ஏதுமில்லை.

இருந்தபோதும், இந்தக் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்படும். லட்சுமிநாராயணன்: தாசில்தார் அலுவலகத்துக்குச் சாதாரண மக்கள் ஆட்டோவில் சென்று வர 150 ரூபாய் செலவாகிறது. எனவே, நகரத்தில் துணை தாசில்தார் அலுவலகம் அமைத்தால் மக்களுக்கு உதவியாக இருக்கும். நகரத்தில் அரசின் பல அலுவலகங்கள் பூட்டிக் கிடக்கிறது. அந்த இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.முதல்வர் ரங்கசாமி: லட்சுமிநாராயணன் கூறிய கருத்து எடுத்துக் கொள்ளப்படும். அதுமாதிரி செய்ய முடியுமா என பார்க்கலாம்.








      Dinamalar
      Follow us