/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லீவு வேணுமா... 'பீஸ்' அனுப்பு! புதுச்சேரி போலீஸ் துறையில் அதிர்ச்சி சம்பவம் அம்பலம்
/
லீவு வேணுமா... 'பீஸ்' அனுப்பு! புதுச்சேரி போலீஸ் துறையில் அதிர்ச்சி சம்பவம் அம்பலம்
லீவு வேணுமா... 'பீஸ்' அனுப்பு! புதுச்சேரி போலீஸ் துறையில் அதிர்ச்சி சம்பவம் அம்பலம்
லீவு வேணுமா... 'பீஸ்' அனுப்பு! புதுச்சேரி போலீஸ் துறையில் அதிர்ச்சி சம்பவம் அம்பலம்
ADDED : மே 24, 2024 03:45 AM
புதுச்சேரி: புதுச்சேரி போலீசில் விடுப்பு கேட்ட போலீஸ்காரரிடம், உயரதிகாரி, மாதுவை அனுப்ப சொன்ன விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி போலீஸ் துறையில் ஆயுதப்படை யுடன், இந்திய ரிசர்வ் பட்டாலியன் (ஐ.ஆர்.பி.,)பிரிவு கடந்த 2004ம் ஆண்டு ஏழு கம்பெனிகளுடன் உருவாக்கப்பட்டது. இங்கு, ஒரு கமாண்டர், 3 துணை கமாண்டர்கள், 7 உதவி கமாண்டர்கள், 160 தலைமை காவலர்கள், 675 போலீசார் என மொத்தம் 1007 பணியிடங்கள் உள்ளன.
சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு உதவி வரும் ஐ.ஆர்.பி., போலீசாருக்கு உயரதிகாரிகள் பல விதங்களில் 'டார்ச்சர்' கொடுத்து வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, லீவ் வேண்டும் என்றால், உயரதிகாரிகள் கேட்பதை வாங்கி கொடுத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டாக நிலவி வருகிறது. அதை மெய்பிக்கும் வகையில், ஆடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், 'ஐ.ஆர்.பி. போலீஸ் காரர் ஒருவர், உடல்நிலை சரியில்லாததால், உதவி கமாண்டரை போனில் தொடர்பு கொண்டு மருத்துவ விடுப்பு கேட்கிறார்.
அப்போது அந்த அதிகாரி, சரி விடுடா, நீ எம்.எல்., போடவே தேவையில்லை. சார் இருக்கேன்டா. நான் பார்த்து கொள்கின்றேன், எனக்கு மனக்கஷ்டமாக இருக்கு. எனக்கு 'பீஸ்' (விலை மாது) அனுப்பு. அமவுண்டை பார்த்துக் கொள்ளலாம் என்கிறார்.
இந்த தொலைபேசி உரையாடல் சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து, சில உதவி கமாண்டர்கள் சம்மந்தப் பட்ட போலீஸ்காரரை அலுவலகத்திற்கு அழைத்து, டி.ஜி.பி., ஐ.ஜி., எல்லாருமே அதிகபட்சம் மூணு வருஷம் தான் இங்கு இருப்பார்கள் அதன்பிறகு போய்விடுவார்கள்.
நாங்கள்தான், உங்களுக்கு சர்வீஸ் முடியும் வரை அதிகாரி என்று அதிகார தொணியில் மிரட்டியுள்ளனர். மேலும் மாதுவை அனுப்ப கூறிய உதவி கமாண்ட் மீது எந்த புகாரும் கொடுக்கக் கூடாது என அச்சுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட போலீஸ்காரரின் மனைவி, கமாண்டர் நாரா சைதன்யாவிற்கு நேரடியாக புகார் அனுப்பி உள்ளார்.
ஐ.ஆர்.பி., போலீசாரிடம் ஈ.எல்., சி.எல்., எம்.எல்., விடுப்பிற்கு பணம், சரக்கு கேட்கும் காலம் போய் விலை மாதுவை கேட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.