தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் மீண்டும் போலி சான்றிதழ் விவகாரம் தமிழக, கேரளா மாணவர்களுக்கு சென்டாக் நோட்டீஸ்

புதுச்சேரியில் மீண்டும் போலி சான்றிதழ் விவகாரம் தமிழக, கேரளா மாணவர்களுக்கு சென்டாக் நோட்டீஸ்

புதுச்சேரியில் மீண்டும் போலி சான்றிதழ் விவகாரம் தமிழக, கேரளா மாணவர்களுக்கு சென்டாக் நோட்டீஸ்


ADDED : ஆக 21, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னைக்கு அனுப்பவும்

புதுச்சேரி: புதுச்சேரியில் போலி சான்றிதழ் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள சூழ்நிலையில், தமிழகம், கேரளா மாணவர்களுக்கு சென்டாக் ேஷாகாஸ்நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில் சென்டாக் அமைப்பு மூலம், ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்தாண்டு பிற மாணவர்கள், போலி குடியிருப்பு சான்றிதழ்களை கொடுத்து புதுச்சேரி மாணவர்களின் எம்.பி.பி.எஸ்., சீட்டுகளை அபகரிக்க முயலுவதாக பெற்றோர், மாணவர்கள் புகார் எழுப்பியுள்ளனர்.

இந்த இரட்டை குடியுரிமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு அரசு இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்த பட்டியலை பெற்ற சென்டாக் தீவிரமாக ஆய்வு செய்தது. அதில், தமிழகம், கேரளா எம்.பி.பி.எஸ்., தரவரிசை பட்டியலில் இடம் பெற்று இருந்த 15 மாணவர்கள், புதுச்சேரி அரசு இட ஒதுக்கீட்டிற்கும் விண்ணப்பித்துள்ளது அம்பலமாகியுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களை பொருத்தவரை மாணவர் ஒருவர் அவர் வசிக்கும் மாநிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இவர்கள் இரண்டு மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துள்ளதால் போலி சான்றிதழ் கொடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சென்டாக் இம்மாணவர்களுக்கு ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இது குறித்து சென்டாக் அதிகாரிகள் கூறுகையில், ‘இம்மாணவர்கள் புதுச்சேரி மட்டுமின்றி, தமிழகம், கேரளா மாநிலங்களிலும் அரசு ஒதுக்கீட்டில் கீழ் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு ேஷாகாஸ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவர்கள் வரும் 24ம் தேதி சென்டாக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்.

இல்லையெனில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம். அடுத்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் அரசு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசை பட்டியலை பெற்று ஆய்வு செய்து உள்ளோம்’ என்றனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us