/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி விமான சேவை; பிப்ரவரிக்கு பின் நிறுத்தம்
/
புதுச்சேரி விமான சேவை; பிப்ரவரிக்கு பின் நிறுத்தம்
புதுச்சேரி விமான சேவை; பிப்ரவரிக்கு பின் நிறுத்தம்
புதுச்சேரி விமான சேவை; பிப்ரவரிக்கு பின் நிறுத்தம்
ADDED : ஜன 15, 2024 06:41 AM
புதுச்சேரி : புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து கடந்த 2013ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால், புதுச்சேரி - பெங்களூர் விமான சேவை துவக்கப்பட்டது.
இச்சேவை நிறுத்தப்பட்ட பின்பு, கடந்த 2015ம் ஆண்டு ஏர் இந்தியா மூலம் மீண்டும் பெங்களூருக்கு விமான சேவை துவங்கியது. அப்போது சுற்றுலா பயணிகளிடம் போதிய வரவேற்பு இல்லாததால் விமான சேவை நிறுத்தப்பட்டது.
மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் கடந்த 2017 ம் ஆண்டு, ஸ்பைட் ஜெட் நிறுவனம் புதுச்சேரி - ஹைதராபாத் இடையிலான விமான சேவையையும், அடுத்த சில மாதத்தில் புதுச்சேரி - பெங்களூர் இடையிலான விமான சேவையை துவக்கியது.
தற்போது தினசரி பெங்களூர் மற்றும் ஹைதராபாத்திற்கு விமான சேவை உள்ளது. தினசரி மதியம் 12:25 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்படும் விமானம் பகல் 2:00 மணிக்கு புதுச்சேரி வருகிறது.
புதுச்சேரியில் பகல் 2:20 மணிக்கு புறப்பட்டு மதியம் 3:20 மணிக்கு பெங்களூர் அடைகிறது. அங்கிருந்து 3.50 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4:50 மணிக்கு புதுச்சேரி வருகிறது. மாலை 5:10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் 6:35 மணிக்கு ஹைதராபாத் செல்கிறது.
புதுச்சேரியில் இருந்து தினசரி 80 பயணிகளுடன், ஹவுஸ் புல்லாக செல்லும் விமானம் சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், புதுச்சேரி பெங்களூர், ஹைதராபாத்திற்கு இயக்கப்படும் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது சம்பந்தமாக விமான நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், விமான சேவையை நிறுத்துவதற்கான கடிதத்தை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மத்திய விமான போக்குவரத்து துறைக்கும் விமான நிறுவனம் அனுப்பி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட விமானத்தை சென்னையில் இருந்து லட்சத்தீவுக்கும், அயோத்திக்கு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூர், ஹைதராபாதிற்கு இயக்கப்பட்ட விமான சேவை நிறுத்தப்பட்டால், புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது.
எனவே, புதுச்சேரியில் இருந்து பெங்களூர், ஹைதாராபாத்திற்கு விமான சேவையை தொடர்ந்து செயல்படுத்த மத்திய விமான போக்குவரத்து துறையை அணுகி மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.