sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்

/

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்

'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்


ADDED : ஜன 07, 2024 04:48 AM

Google News

ADDED : ஜன 07, 2024 04:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; 'தினமலர் - பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி வினாவின் இறுதி சுற்று போட்டி புதுச்சேரியில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் முதலிடம் பிடித்த புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடும் வாய்ப்பினை பெற்றனர்.

நாட்டின் எதிர்காலமாக விளங்கும் மாணவர்களுக்கு, சிறப்பான அடித்தளம் அமைக்கும் நோக்கில், 'தினமலர்' நாளிதழ், பட்டம் எனும் மாணவர் பதிப்பை வெளியிட்டு வருகிறது.

இது, தமிழில் வெளியாகும், ஒரே மாணவர் பதிப்பாகும், பள்ளி மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் வகையில், பள்ளி அளவிலும், மாநில அளவில் கடந்த 2018ம் ஆண்டு முதல் மெகா வினாடி வினா போட்டியை, பட்டம் இதழ் நடத்தி வருகிறது.

இந்தாண்டு, புதுச்சேரி ஆச்சாரியா வோல்டு கிளாஸ் எஜூகேஷன் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி, வி-3 (வினாடி வினா விருது) என்ற பெயரில் புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த 175 பள்ளிகளில் கடந்த செப்டம்பர் மாதம் கோலாகலமாகத் துவங்கியது. இதில் மொத்தம் 30 ஆயிரம் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

முதற்கட்ட போட்டியில் வென்று, ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கான இறுதிச்சுற்று வினாடி வினா போட்டி புதுச்சேரி ஜிப்மர் அப்துல்கலாம் ஆடிட்டோரியத்தில் நேற்று நடந்தது.

பள்ளி அளவிலான முதற்கட்ட வினாடி வினா போட்டியில் சொல்லி அடித்து கில்லிகளாக தெறிக்கவிட்டு, களம் இறங்கிய மாணவர்களுக்கு இறுதி சுற்றில் பங்கேற்பதற்கான எழுத்து தேர்வு நடந்தது.

20 கேள்விகள் அடங்கிய வினாத் தாள் வழங்கப்பட்டன. இந்த வினாக்களுக்கு ஒவ்வொரு பள்ளி அணிகளும் அசத்தலாகவே பதில் அளிக்க சிறந்த பள்ளி அணியை தேர்வு செய்வது நடுவர் குழுவிற்கு சவாலாகவே இருந்தது.

பின், தேர்வு செய்யப்பட்ட எட்டு பள்ளி அணிகளுக்கு இறுதிபோட்டி மாணவர்கள் முன்னிலையில் ஐந்து சுற்றுகளாக நடந்தது. பட்டம் மாணவர் இதழ் பொறுப்பாசிரியர் வெங்கடேஷ் அறிமுக உரையாற்றினார்.

இறுதி சுற்று வினாடி வினா போட்டியை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

பெங்களூரு இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேல், புதுச்சேரி 'தினமலர்' வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன், ஆச்சார்யா வோல்டு கிளாஸ் எஜூகேஷன் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அமலோற்பவம் பள்ளி முதலிடம்


கடைசி வரை ஆர்வமும், திரிலும், திருப்பமுமாக நடந்த இறுதிப்போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப்பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு அடங்கிய அணி முதலிடத்தை தட்டி சென்றது. அவர்களுக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இதன் மூலம் இருவரும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தினை சுற்றி பார்க்கும் அரிய வாய்ப்பினை பெற்றனர்.

'தினமலர்' மாணவர் பதிப்பு சார்பில் பெங்களூரு இஸ்ரோ சந்திரயான்-3 திட்ட இயக்குனர் விஞ்ஞானி வீரமுத்துவேலுடன், 'தினமலர்' விற்பனை பிரிவு மற்றும் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் இணை இயக்குனர் ஆர்.சீனிவாசன், ஆச்சார்யா வோல்டு கிளாஸ் எஜூகேஷன் கல்வி நிறுவனங்களில் நிர்வாக இயக்குனர் அரவிந்தன் இணைந்து கோப்பையை வழங்கி பாராட்டினர்.

இரண்டாம் இடம் பிடித்த கடலுார் மாவட்டம், பண்ருட்டி திருவள்ளுவர் மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவர்கள் பாலபாரதி, நித்யஸ்ரீ ஆகியோருக்கு இரண்டு லேப்டாப்கள், கோப்பை பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் பிடித்த விழுப்புரம் ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சண்முகபிரியன், ஜனார்த்தனன் ஆகியோருக்கு இரண்டு ஐபேடு, சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

ஸ்மார்ட் வாட்சுகள்


நான்காம் இடம் பிடித்த புதுச்சேரி ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் மாணவர்கள் லக் ஷன், மோனிஷ், ஐந்தாம் இடம் பிடித்த விருத்தாசலம் கே.எஸ்.ஆர் ைஹடெக் பள்ளி மாணவர்கள் நந்தினிஸ்ரீ, பார்கவி, ஆறாம் இடம் பிடித்த புதுச்சேரி பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் காமேஷ், கிேஷார், ஏழாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சக்திபிரியா, ரூபாஸ்ரீ, எட்டாம் இடம் பிடித்த விருத்தாசலம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனவித்யா, யுவராஜ், உள்ளிட்ட 10 பேருக்கும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச், கேடயம் பதக்கம், பரிசாக வழங்கப்பட்டது.

பார்வையாளர்களுக்கு பரிசு


இறுதி சுற்றில் பங்கேற்க தவறினாலும், பார்வையாளராக இருந்த மாணவர்கள் மேடையில் இருந்து எட்டு அணிகளும் பதிலளிக்க திணறிய கேள்விகளுக்கு அசத்தலான பதிலளித்து கைத்தட்டலை அள்ளினர். அவர்களுக்கு புளுடூத் நெக்பாண்ட் பரிசாக வழங்கப்பட்டது.

நினைவு பரிசு


வினாடி வினா முதற்கட்ட தேர்வில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கு பெற செய்த புதுச்சேரி பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், விழுப்புரம் சரஸ்வதி குரூப் ஆப் எஜூகேஷன் நிர்வாக இயக்குனர் முத்துசரவணன், விழுப்புரம் ரோட்டரி எஜூகேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள் சரவணன், அன்பழகன், விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர வித்யாலயா டைமண்ட் ஜூப்லி பள்ளி செயலாளர் ஜனார்த்தனன், காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக்குலேஷன் நிறுவனர் முத்துகுமரன், தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us