தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கலை விழா-2026 : முதல்வர் துவக்கி வைப்பு

 புதுச்சேரி கலை விழா-2026 : முதல்வர் துவக்கி வைப்பு

 புதுச்சேரி கலை விழா-2026 : முதல்வர் துவக்கி வைப்பு


ADDED : ஆக 17, 2026 04:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 04:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை காந்தி திடலில் கலை விழாவினை முதல்வர் ரங்கசாமி முரசு கொட்டி துவக்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத்துறை மற்றும் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் சார்பில் புதுச்சேரி கலை விழா--2026 தொடக்க விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி பங்கேற்று, விழாவை முரசு கொட்டி துவக்கி வைத்தார்.

இதில் புதுச்சேரி, அசாம், உத்தரகாண்ட், அரியானா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர், குஜராத், தெலுங்கானா, கேரளம், கர்நாடகா, ரீயூனியன் தீவு ஆகிய மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டு தங்களது மாநிலங்களில் பராம்பரிய கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

இந்த கலை விழா மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை புதுச்சேரி கடற்கரை காந்தி திடல் மட்டுமின்றி, கருவடிக்குப்பம் காமராஜர் மணிமண்டபம், மடுகரை மந்தைவெளி திடல், உறுவையாறு அரசு கலையரங்கம், திருக்கனூர் மாரியம்மன் கோவில் திடல் என 5 இடங்களில் வரை நடக்கின்றன.

விழாவில் அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஆறுமுகம், விக்னேஷ், அரசு செயலாளர் முகமது அசன் அபித், இயக்குனர் சக்திவேல் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கலை விழாவை கடற்கரைக்கு வந்திருந்த உள்ளூர்வாசிகள் மற்றும் வெளிமாநில சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us