/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ரூ.700 கோடி கூடுதல் செலவுக்கு புதுச்சேரி சட்டசபையில் ஒப்புதல்
/
ரூ.700 கோடி கூடுதல் செலவுக்கு புதுச்சேரி சட்டசபையில் ஒப்புதல்
ரூ.700 கோடி கூடுதல் செலவுக்கு புதுச்சேரி சட்டசபையில் ஒப்புதல்
ரூ.700 கோடி கூடுதல் செலவுக்கு புதுச்சேரி சட்டசபையில் ஒப்புதல்
ADDED : பிப் 13, 2025 04:51 AM
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 700 கோடி கூடுதல் செலவினத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டு, காலவரையற்றி சட்டசபை ஒத்தி வைக்கப்பட்டது.
புதுச்சேரி சட்டசபையில் வழக்கமாக மார்ச் மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த ஆண்டு லோக்சபா தேர்தல் குறுக்கிட்டதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. அப்போது நிதி ஆறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி முடிவடைந்தது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்பது விதி. இதனால் வரும் 14ம் தேதிக்குள் மீண்டும் சட்டசபை கூட்ட வேண்டும். அதன்படி புதுச்சேரி சட்டசபையின் கூட்டம் நடந்தது.
சபை நிகழ்வுகளை சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து துவங்கினார். தொடர்ந்து இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் சபையில் ஜி.எஸ்.டி., வரி தொடர்பான ஏடுகள், 2023-24ம் ஆண்டு ஜி.எஸ்.டி., ஆண்டறிக்கை, இந்திய தணிக்கை துறை தலைவரின் திடக்கழிவு மேலாண்மை குறித்த செயலாக்க தணிக்கை அறிக்கை, தணிக்கை அறிக்கை, பொது சுகாதார உள் கட்டமைப்பு மற்றும் சுகாதார சேவைகளின் மேலாண்மை பற்றிய செயலாக்க தணிக்கை அறிக்கை, யூனியன் பிரதேச அரசின் நிதிநிலை தணிக்கை அறிக்கை ஆகியவற்றை முதல்வர் சட்டசபையில் வைத்தார்.
இதன்பின் 2024--25ம் ஆண்டு கூடுதல் செலவின மதிப்பீடுகளை காட்டும் அறிக்கை முன்னிலைப்படுத்தப்பட்டது. இதன்மீது துறைவாரியாக முதல்வர், அமைச்சர்கள் கூடுதல் செலவினங்களை தாக்கல் செய்தனர்.
ஒட்டுமொத்தமாக ரூ.700 கோடியே 25 லட்சத்து 30 ஆயிரத்துக்கு நடப்பு நிதி ஆண்டில் கூடுதல் செலவினங்கள் மதிப்பிடப்பட்டிருந்தது.
இதன்மீது சபாநாயகர் செல்வம் குரல் வாக்ககெடுப்பு நடத்தி கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்பட்டது. தொடர்ந்து அரசின் சட்ட முன்வரைவுகளும், வரி விதிப்பு திருத்த சட்ட முன்வரைவுகளும் சபையில் தாக்கல் செய்யப்பட்டன.
ஒத்தி வைப்பு
காலை 9.30 மணிக்கு கூடிய சட்டசபை 10.55 மணிக்கு சபையின் அனைத்து அலுவல்களும் நிறைவு பெற்றது. இதையடுத்து சபாநாயகர் செல்வம், சபையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
அடுத்த நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளது.