sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்தது: 30 தொகுதிகளுக்கு 445 பேர் மனுதாக்கல்

/

 புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்தது: 30 தொகுதிகளுக்கு 445 பேர் மனுதாக்கல்

 புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்தது: 30 தொகுதிகளுக்கு 445 பேர் மனுதாக்கல்

 புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் சூடுபிடித்தது: 30 தொகுதிகளுக்கு 445 பேர் மனுதாக்கல்


ADDED : மார் 23, 2026 10:31 PM

Google News

ADDED : மார் 23, 2026 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 445 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

புதுச்சேரியின் 16வது சட்டசபை தேர்தல் வரும் ஏப்.9ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 15ம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

தேர்தலுக்கான மனுத் தாக்கல் கடந்த 16ம் தேதி துவங்கியது. புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு 12 இடங்களிலும், காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளுக்கு மூன்று இடங்களிலும், ஏனாம் மற்றும் மாகி தொகுதிகளுக்கு அந்தந்த தொகுதி என மொத்தம் 17 இடங்களில் மனுக்கள் பெறப்பட்டது.

தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே மனு தாக்கல் துவங்கியது. இருப்பினும், முதல் இரண்டு நாள் எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. அரசியல் கட்சிகளுக்குள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக கடந்த 21ம் தேதிவரை 119 வேட்பாளர்கள் 135 மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

மனு தாக்கலுக்கு இறுதிநாளான நேற்று தே.ஜ., கூட்டணி, இண்டி கூட்டணி, த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் காலை மனு தாக்கலுக்கு, தங்கள் ஆதரவாளர்களுடன் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகங்கள் முன் குவிந்தனர். இதனால், மனு தாக்கல் நேரம் மாலை 3 மணியுடன் முடிந்தாலும், அதற்கு முன்பாக வந்த வேட்பாளர்களுக்கு 'டோக்கன்' வழங்கி மாலை 5 மணி வரை மனுக்கள் பெறபட்டது.

மனு தாக்கலின் இறுதி நாளான நேற்று மட்டும் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கும் 326 வேட்பாளர்கள், 380 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இதன் மூலம், மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு 445 வேட்பாளர்கள் 515 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்படுகிறது. உரிய ஆவணங்கள் இல்லாத மனுக்கள் தள்ளுபடி செய்து, ஏற்கப்பட்ட மனு விபரங்கள் இன்று மாலை வெளியிடப்படும். மனுக்களை நாளை 26ம் தேதி மாலை 3 மணிக்குள் வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தொகுதிவாரியாக மானு தாக்கல் விபரம்

------------------------------------------------

தொகுதி வேட்பாளர் எண்ணிக்கை மனுக்கள் எண்ணிக்கை

------------------------------------------------

மண்ணாடிப்பட்டு 16 23

திருபுவனை(தனி) 15 22

ஊசுடு (தனி) 5 5

மங்கலம் 13 15

வில்லியனுார் 19 19

உழவர்கரை 21 21

கதிர்காமம் 13-14

இந்திரா நகர் 16 16

தட்டாஞ்சாவடி 16-21

காமராஜ் நகர் 15 18

லாஸ்பேட் 16 17

காலாப்பட்டு 10 12

முத்தியால்பேட்டை 17 19

ராஜ்பவன் 12 15

உப்பளம் 9 11

உருளையன்பேட்டை 20 23

நெல்லித்தோப்பு 23 27

முதலியார்பேட்டை 19 19

அரியாங்குப்பம் 15 15

மணவெளி 12 14

ஏம்பலம்(தனி) 12 15

நெட்டப்பாக்கம் (தனி) 27 27

பாகூர் 18 22

நெடுங்காடு (தனி) 10 10

திருநள்ளாறு 10 10

காரைக்கால் வடக்கு 14 18

காரைக்கால் தெற்கு 11-12

நிரவி 12 15

மாகி 10 12

ஏனாம் 19 28

-----------------------------

மொத்தம் 445 515

-----------------------------

நெட்டப்பாக்கத்தில் அதிகம் மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளில் அதிகப்பட்சமாக நெட்டப்பாக்கம் (தனி) தொகுதியில் 27 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதேபோன்று, ஊசுடு (தனி) தொகுதியில் குறைந்தபட்சமாக 5 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us