மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு: புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
UPDATED : ஆக 31, 2026 07:48 PM
ADDED : ஆக 31, 2026 07:32 PM
புதுச்சேரி: மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படட்து.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் நாஜிம், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், நேரு, ஜோல்சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர். இது அரசு தீர்மானமாக ஏற்கப்பட்டது.
தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு மாறாக, தமிழக எல்லையில் சுமார் 5 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்க கூடாது. கர்நாடக அரசின் இந்த செயலுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதுடன், கண்டனத்தையும் பதிவு செய்கிறேன். புதுச்சேரி மாநில மக்களின் எதிரானதாக மேகதாது அணைக்கட்டும் நடவடிக்கை உள்ளது.
காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அணை கட்டும் நடவடிக்கைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி, புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளை பாதுகாத்திட, அரசு எடுக்கும் அனைத்து நவடிகைகளுக்கும் முழு ஆரதவை இந்த சபை அளிக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் நாஜிம், தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், நேயம் மக்கள் கழக தலைவர் நேரு, லட்சிய ஜனநாயக கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆகியோர் மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து பேசினார்.
அரசு முன் மொழிந்த தீர்மானத்தை சபாநாயகர் அன்பழகன் குரல் வாக்கெடுப்புக்கு அனுமதித்தார். முதல்வர் ரங்கசாமி கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
