/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 35 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி வீரர்கள்
/
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 35 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி வீரர்கள்
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 35 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி வீரர்கள்
தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி 35 பதக்கங்களை அள்ளிய புதுச்சேரி வீரர்கள்
ADDED : டிச 26, 2025 05:24 AM
புதுச்சேரி: தேசிய அளவிலான 63வது ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி மாணவர்கள் 35 பதக்கங்களை குவித்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில், கடந்த 5 முதல் 15 வரை நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், பங்கேற்ற வீரர் - வீராங்கனைகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர்.
நிதின் ஸ்டீவ் ஜாப்ஸ் தங்கம் வென்றார். சந்தோஷ் 2 தங்கம், ஆந்யா, ஹர்ஷிதா, லோநாத், விஷ்ணுபிரசாத், நாவிக்பாலு, முஹம்மது அர்மான், கிரிதரன், கிரிதாசன் உள்ளிட்டோரின் தங்க, வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்றனர்.
மோனிஷா, கனிஷ்கா, பிரசாந்த், ஷிவன்ஷ் சுனில் ஜாதவ், சுபிக் ஷா, சாரதி, ஜெயஷிதா வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
மெர்லின் தனம் அர்ப்புதம் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். மாற்றுத் திறனாளி சிறுவன் ரவிச்சந்திரன், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.
வீரர்களை புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் சங்க பொது செயலாளர் தாமஸ் வழிநடத்தினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சங்க நிறுவனர் திருவேங்கடம், தலைவர் பழனி பாராட்டு தெரிவித்தனர்.
சங்க தலைவர் பழனி கூறுகையில், 'தேசிய அளவில் 35 பதக்கங்களைப் பெற்ற இந்தச் சாதனை, புதுச்சேரி ரோலர் ஸ்கேட்டிங் வரலாற்றில் மறக்க முடியாத தருணம். வீரர்களின் மன உறுதி, பயிற்சியாளர்களின் அர்ப்பணிப்பு, பெற்றோர் மற்றும் நிறுவனங்களின் ஆதரவு ஆகியவை ஒன்றிணைந்ததாலேயே இத்தகைய வெற்றியை எட்ட முடிந்தது' என்றார்.
சங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் முதல்வர் ரங்கசாமி, விளையாட்டுத் துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

