/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட தமிழக பஸ்கள் மீது வழக்குப்பதிவு புதுச்சேரி அதிகாரிகள் அதிரடி

ADDED : அக் 22, 2025 05:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத் திய சோதனையில், ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 28 தமிழக பஸ்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் உத்தரவின்பேரில், புதுச்சேரி வட்டார போக்குவரத்து அதிகாரி பிரபாகர்ராவ் தலைமையில் சந்தோஷ், புவனேஷ், அலெக்ஸ் ஆண்ட்ரூஸ், அண்ணாமலை உள்ளிட்ட உதவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பகுதியில் காலை 7:00 முதல் 11:30 மணி வரை நடத்தப்பட்ட சோதனையில், ஆவணங்ள் இல்லாமல் இயக்கப்பட்ட தமிழக அரசு போக்குவரத்து கழக பஸ்கள் மற்றும் தனியார் ஆம்னி பஸ்கள் என, மொத்தம் 28 பஸ்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.