/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேலும் 3 மருந்துகளுக்கு தடை புதுச்சேரி அதிகாரிகள் அதிரடி
/
மேலும் 3 மருந்துகளுக்கு தடை புதுச்சேரி அதிகாரிகள் அதிரடி
மேலும் 3 மருந்துகளுக்கு தடை புதுச்சேரி அதிகாரிகள் அதிரடி
மேலும் 3 மருந்துகளுக்கு தடை புதுச்சேரி அதிகாரிகள் அதிரடி
ADDED : ஜன 21, 2026 07:25 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், மேலும் மூன்று மருந்துகளை விற்க தடை விதித்து, மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள், கடந்த ஆகஸ்டில், ஆக்ராவில் உள்ள மருந்து கடைகளில் நடத்திய ஆய்வில், போலி மருந்துகள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், அவை புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது தெரிந்தது.
புகாரை தொடர்ந்து, புதுச்சேரியில் நடத்திய ஆய்வில் பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும் விலை அதிகமுள்ள மற்றும் அதிக விற்பனையாகும் மருந்துகளை போலியாக தயாரித்து, நாடு முழுதும் விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நாடு முழுதும் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன்படி, புதுச்சேரியில் 35 வகையான மருந்துகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேலும் மூன்று வகையான மருந்துகளை தடை செய்து புதுச்சேரி மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்தகிருஷ்ணன், மருந்து வினியோகிஸ்தர்கள் மற்றும் மருந்து கடைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஹிமாச்சல் பிரதேச மாநிலம், சிர்மூர் மாவட்டம், மோகினந்த் நகரில் உள்ள 'க்னாசிஸ் பார்மாசூட்டிக்கல்ஸ்' பிரைவேட் லிமிடெட் நிறுவன தயாரிப்பான 'பான்டோபிரசோல்' மருந்து, கேரளா மற்றும் குஜராத் மாநிலம், ஆமதாபாத் மாவட்டம், அபான் பார்மாசூட்டிக்கல் நிறுவன தயாரிப்பான பெபாவிட் என்ற பாராசிட்டமல் 650 மி.கி., மாத்திரை விற்க கூடாது.
அதே போல, ராஜஸ்தான் மாநிலம், கர்னானி பார்மாசூட்டிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பான சங்காவதி 5 கிராம் என்ற ஆயுர்வேதா மருந்தும் விற்க தடை விதிக்கப்பட்டுள்து.
இந்த மூன்று மருந்துகளை சம்பந்தப்பட்ட கம்பெனிகளுக்கு திருப்பி அனுப்பிய விபரத்தை, புதுச்சேரி மருந்து தர கட்டுப்பாட்டு துறைக்கு உடன டியாக தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

