/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாய் கிருஷ்ணா மையங்களால் புதுச்சேரிக்கு நன்மை; கவர்னர்
/
சாய் கிருஷ்ணா மையங்களால் புதுச்சேரிக்கு நன்மை; கவர்னர்
சாய் கிருஷ்ணா மையங்களால் புதுச்சேரிக்கு நன்மை; கவர்னர்
சாய் கிருஷ்ணா மையங்களால் புதுச்சேரிக்கு நன்மை; கவர்னர்
ADDED : பிப் 22, 2024 07:07 AM
புதுச்சேரி : சாய் கிருஷ்ணா மையங்களின் மூலம் புதுச்சேரி நன்மை பெறுகிறது என, கவர்னர் தமிழிசை பேசினார்.
புதுச்சேரி கோபாலன்கடை, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் நகரில், சாய் கிருஷ்ணா என்ற பெயரில், புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய்சேவா மையம் திறப்பு விழாவில், பங்கேற்ற அவர், பேசியதாவது;
நான் இங்கு கவர்னராக வரவில்லை. பகவானின் பக்தையாக வந்துள்ளேன்.உணர்வு பூர்வமாக தினமும் என்னை பகவான் வழிகாட்டி கொண்டிக்கிறார் என, ஆழமாக, உறுதியாக நம்புகிறேன்.பிரதமர் மோடி முன்னெடுப்பினால் நாடு முன்னேறிக் கொண்டிருப்பதற்கு நாம் நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.
ஒரு பெண் பொது வாழ்க்கையில் முன்னேறி வருவது சாதாரண விஷயம் அல்ல. இன்றளவும் குறிப்பாக அரசியலில் பெண்கள் முன்னேறி வருவது கடினமான ஒன்று. பல்வேறு இக்கட்டான சூழல்களில் எனக்கு பகவானின் அருள் மூலம் நல்லது நடந்திருக்கிறது.
ஒரு மருத்துவராகவும் அரசியல்வாதியாகவும் ஒரு பெண்ணாகவும் பல்வேறு சூழலில் எனக்கு பகவானின் மூலம் நல்லது நடந்திருக்கிறது. பிரதமர் வழிகாட்டுதலில் சிறந்த புதுச்சேரியாக மாறி வருகிறது. இதற்கு பகவான் அருள் நமக்கு பக்கபலமாக இருக்கும்' என்றார்.