/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பா.ஜ., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமனம்
/
புதுச்சேரி பா.ஜ., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி பா.ஜ., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமனம்
புதுச்சேரி பா.ஜ., தேர்தல் குழு நிர்வாகிகள் நியமனம்
ADDED : டிச 09, 2025 05:42 AM
புதுச்சேரி: பு துச்சேரி பா.ஜ., 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் பா.ஜ., தேர்தல் அறிக்கை குழு நிர்வாகிகள் பட்டியல் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது குறி த்து பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி தேர்தல் குழுவை பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஒப்புதலுடன் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தேர்தல் குழுவின் தலைவராக பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைப்பளராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், 12 பேர் கொண்ட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உறுப்பினர்களாக சபா நாயகர் செல்வம், எம்.எல்.ஏ.,க்கள்., கல்யாணசுந்தரம், செல்வம், துணைத் தலைவர் அகிலன், முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் பாபு, துணைத் தலைவர் ஜெயலட்சுமி, மாநில பொதுச் செயலாளர்கள் மோகன்குமார், லட்சுமி நாராயணன், மாநில செயலாளர் புகழேந்தி, செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மீனவர் பிரிவு தலைவர் மாரியப்பன், மாநில மகளிர் அணி தலைவி தாமரைச்செல்வி ஆகியோர் மாநில தேர்தல் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

