/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை மாற்ற புதுச்சேரி பா.ஜ., அதிரடி முடிவு
/
தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை மாற்ற புதுச்சேரி பா.ஜ., அதிரடி முடிவு
தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை மாற்ற புதுச்சேரி பா.ஜ., அதிரடி முடிவு
தலைவர், அமைச்சர், எம்.எல்.ஏ.,க்களை மாற்ற புதுச்சேரி பா.ஜ., அதிரடி முடிவு
ADDED : ஜன 19, 2025 05:52 AM
தலைவர், அமைச்சர், நியமன எம்.எல்.ஏ.,களை புதிதாக நியமிக்க புதுச்சேரி பாஜ., தயாராகி வருகிறது.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்., - பாஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. என்.ஆர்.காங்., சார்பில் 10 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
பாஜ., சார்பில் 6 எம்.எல்.ஏ.,க்கள் வெற்றி பெற்றனர். இதில் சபாநாயகராக செல்வம், உள்துறை அமைச்சராக நமச்சிவாயம், அமைச்சராக சாய் சரவணன், முதல்வரின் பாராளுமன்ற செயலராக ஜான்குமார் ஆகியோர் பதவியில் உள்ளனர்.
மேலும் ராமலிங்கம், வெங்கடேசன், அசோக் பாபு ஆகியோர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக உள்ளனர்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றி பெறுவதற்காக மாநிலத்தில் தலைவர் பதவி முதல் அனைத்து அணி தலைவர் பதவிகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.
புதிய மாநில தலைவர் யார் என்பதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் பாஜ., அமைச்சர் ஒருவரை ராஜினாமா செய்ய வைத்து அதிருப்தியில் உள்ள மூன்று எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு அமைச்சர் பதவி தர கட்சி தலைமை தயாராகி வருகிறது. இதுமட்டுமின்றி தற்போது உள்ள நியமன எம்.எல்.ஏ., க்கள் மூன்று பேரையும் ராஜினாமா செய்ய வைத்து, புதிதாக மூன்று பேருக்கு நியமன எம்.எல்.ஏ.,க்கள் பதவியை தர கட்சி மேலிடம் முடிவெடுத்துள்ளது.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ., தீப்பாய்தான், காரைக்காலை சேர்ந்த ராஜசேகர் மற்றும் மீனவர் அல்லது வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரும் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் புதுச்சேரி பாஜ., அலுவலகம் கடந்த சில நாட்களாக பரப்பரப்பாக காணப்படுகிறது.