ADDED : ஜன 23, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சி கமிஷனர் கந்தசாமி, துணை தலைமைத் தேர்தல் அதிகாரியாக மாற்றப்பட்டுள்ளார்.
புதுச்சேரி தேர்தல் துறை துணை தலைமைத் தேர்தல் அதிகாரி ஆதர்ஷ், உள்ளாட்சி துறை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, புதுச்சேரி நகராட்சி கமிஷனர் கந்தசாமி, தேர்தல் துறை துணை தலைமை தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்படி, சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.
