ADDED : ஏப் 28, 2026 01:59 AM

சாலை படுமோசம்
மூலக்குளம் - மேட்டுப்பாளையம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
ராம்குமார், புதுச்சேரி.
மின் விளக்கு எரியுமா?
இந்திரா சதுக்கம் முதல் மூலக்குளம் வரையிலான சாலையில் மின் விளக்குகள் எரியாமல், இரவு நேரங்களில் அப்பகுதி இருண்டு கிடக்கிறது.
கருணா, புதுச்சேரி.
பொது இடத்தில் மது பாட்டில்கள்
தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் மது குடிப்பவர்கள் பாட்டில்களை வீசி செல்வதால், உடைத்த பாட்டில்கள் அவ்வழியாக நடந்து செல்வோரின் கால்களை பதம் பார்க்கின்றன.
மணி, தட்டாஞ்சாவடி.
டவுன் பஸ் தேவை
ஜிப்மருக்கு இரவு நேரங்களில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், புதுச்சேரி.
சாலையில் மாடுகள்
அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதால் சாலை விபத்து ஏற்பட்டு வருகிறது.
விக்னேஷ், புதுச்சேரி.
பயணியர் நிழற்குடை தேவை
மரப்பாலம் சந்திப்பில் பயணியர் நிழற்குடை இல்லாமல் மக்கள் வெயிலில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.
பாஸ்கர், மரப்பாலம்.

