/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி காங்., தலைவர் டில்லி பயணம்
/
புதுச்சேரி காங்., தலைவர் டில்லி பயணம்
ADDED : நவ 18, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காங்., தலைவர் மற்றும் நிர்வாகிகள் டில்லி சென்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 14 மாநிலங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணி தொடர்பாக காங்., சார்பில் ஆய்வு கூட்டம் இன்று, புதுடில்லி இந்திரா பவனில் நடக்கிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்., சட்டசபை தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் டில்லி சென்றுள்ளனர்.
எஸ்.ஐ.ஆர்., ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து, அந்தந்த மாநிலங்களில் நடைபெறும் கட்சி வளர்ச்சி பணி மற்றும் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

