தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் 'இண்டி' கூட்டணி: கிரீஷ் ஷோடங்கர்

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் 'இண்டி' கூட்டணி: கிரீஷ் ஷோடங்கர்

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையில் 'இண்டி' கூட்டணி: கிரீஷ் ஷோடங்கர்


ADDED : மார் 06, 2026 09:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 09:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்., தலைமையிலான 'இண்டி' கூட்டணி அமைந்துள்ளது என மேலிட பொறுப்பாளர் கிரீஷ் ஷோடங்கர் தெரிவித்தார்.

காங்., அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுன் நடந்த கூட்டதிற்கு பின், அவர் அளித்த பேட்டி:

புதுச்சேரியில் மக்கள் நலன் காக்கும் அரசை அமைக்கும் நோக்கில், காங் - திமுக உள்ளடக்கிய கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலைச் சந்திக்க முடிவு செய்துள்ளன. இதற்காக முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில், ஏழு பேர் கொண்ட அதிகாரப் பூர்வ குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக் குழுவினர் திமுக மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து இறுதி பேச்சு நடத்துவர்.

​புதுச்சேரியின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் மாநிலத்தின் இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. புதுச்சேரியின் துறைமுகங்கள் உள்ளிட்ட முக்கியச் சொத்துக்கள் அதானி போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

தமிழகத்தில், திமுக தலைமையிலான 'இண்டி' கூட்டணி செயல்படுகிறது. அதேபோல்,​புதுச்சேரியில் காங்., தலைமையில் கூட்டணி இருக்கும். இந்த நிலையை உறுதிப்படுத்தி, தொகுதி பங்கீடு குறித்து பேச்சு நடத்துவதற்காகத் தங்களது குழுவை அனுப்புமாறு, திமுக தலைமைக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளோம்.

கூட்டணி என்பது தியாகம் சார்ந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, மக்கள் நலனுக்காக தேர்தலைச் சந்திக்கிறோம்.

சென்னையில் திமுக, மேலிடத்துடன் நடத்தப்பட்ட முதற்கட்டப் பேச்சில், கூட்டணியின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிந்த பின்பே, கூட்டணியின் முதல்வ்ர் வேட்பாளரை முடிவெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us